ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 3 நாட்கள் விடுமுறை
ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு அருகே செம்மாம்பாளையத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் நடத்தப்படும் மார்க்கெட், ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் என 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மார்க்கெட்டுகளுக்கு வெளிமாநில வியாபாரிகளும் ஏராளமானவர்கள் வந்து மஞ்சளை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.
அரசு விடுமுறை நாட்கள் தவிர வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் மார்க்கெட் செயல்படுகிறது. இந்தநிலையில் நாளை (வியாழக்கிழமை) இரவு சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் விடுமுறை என்பதால் மொத்தம் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. வருகிற 15-ந் தேதி முதல் வழக்கம்போல் மஞ்சள் மார்க்கெட் செயல்படும் என்று மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story