ஈரோடு பஸ் நிலைய தூண்களில் விரிசல்; பயணிகள் செல்ல தடை
ஈரோடு பஸ் நிலைய தூண்களில் விரிசல் ஏற்பட்டதால் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு பஸ் நிலையத்தில் நாமக்கல் பஸ்கள், டவுன் பஸ்கள் நிற்கும் நடைமேடைகளில் உள்ள தூண்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அந்த தூண்கள் வலுவிழந்து காணப்படுவதால் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக நேற்று தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் நிலையத்தில் புனரமைக்கும் பணி தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் உள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள தூண்கள் மிகவும் பழுதடைந்து உள்ளதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவடைந்த பிறகு பணிகள் தொடங்கப்படும்”, என்றார்.
Related Tags :
Next Story