பறக்கும் படையினர் சோதனையில் ரூ.36 லட்சம் சிக்கியது
கோவை மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினர் சோதனையில் ரூ.36 லட்சம் சிக்கியது.
கோவை
கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தொகுதிக்கு 3 பறக்கும் படை வீதம் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 30 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர 30 நிலையான குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு குழுவில் துணை தாசில்தார் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், வீடியோ கேமராமேன் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் கடந்த சில நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை மொத்தம் ரூ.36 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவையில் இன்று (நேற்று) கோவை தெற்கு தொகுதியில் ரூ.2 லட்சத்து 49 ஆயிரம், கிணத்துக்கடவு தொகுதியில் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 900 என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 14 பேரிடம் இருந்து 21 லட்சத்து 73 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை 28 பேரிடம் இருந்து ரூ.36 லட்சத்து 19 ஆயிரத்து 530 பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story