ஆட்டோ திருடியவர் சிக்கினார்


ஆட்டோ திருடியவர் சிக்கினார்
x
தினத்தந்தி 10 March 2021 9:04 AM IST (Updated: 10 March 2021 9:08 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே ஆட்டோ திருடியவர் சிக்கினார்.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 42). ஆட்டோ வைத்து ஓட்டி வரும் இவர் பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கப்படையில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருமங்கலம் அருகே வந்தபோது ஆட்டோ பழுதாகி நின்றது. இதனால் ஆட்டோவை அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். திரும்ப வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இது குறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் பாண்டி புகார் செய்தார்.
உடனடியாக திருமங்கலம் போலீசார் கப்பலூர் சுங்கச்சாவடி மற்றும் பல்வேறு ஆட்டோ நிறுத்தங்களில் விசாரணை செய்தனர். இதில் ஆட்டோ கப்பலூர் சுங்கச்சாவடியை தாண்டி செல்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சேர்ந்து ஆட்டோவை மடக்கி பிடித்து திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆட்டோவை திருடிச் சென்றது தொண்டைமான் புதுக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story