செல்போனில் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த பள்ளி மாணவிகள் மீட்பு
செல்போனில் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த பள்ளி மாணவிகள் மீட்கப்பட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் 8-ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமிகள் உள்ளனர். இவர்கள் ஆன்லைன் வகுப்பிற்கு வாங்கி கொடுத்த செல்போனில் அதிகம் நேரம் பேசுவதை அவர்களது பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த 2 சிறுமிகளும் திடீரென வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததில், மாயமாகி விட்டனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில், திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மணலி புதுநகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் அருகே 2 சிறுமிகள் சுற்றித்திரிவதை கண்டனர். இதையடுத்து போலீசார் சிறுமிகளை மீட்டு, அறிவுரை கூறி பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story