மஞ்சூர் அருகே சிறுத்தை தாக்கியதில் விவசாயி படுகாயம்
மஞ்சூர் அருகே சிறுத்தை தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.
ஊட்டி,
மஞ்சூர் அருகே தங்காடு ஓரநள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 38), விவசாயி. இவர் அதே பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை கேரட்டுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டார். இதற்காக சிறிய குழாய்களை எடுக்க சென்றபோது புதரில் மறைந்து நின்ற சிறுத்தை ஒன்று எதிர்பாராதவிதமாக சிவகுமாரை தாக்கியது.
இதில் அவர் கை, காலில் படுகாயம் ஏற்பட்டது. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஓரநள்ளி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். எனவே அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story