சேலம் மாநகராட்சி சார்பில் மாணவிகளுக்கு முக கவசம் ஆணையாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்
மாணவிகளுக்கு முக கவசம்
சேலம்:
சேலம் மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பிற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில், மாநகர் அலுவலர் பார்த்திபன் உள்பட சிலர் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மாணவிகள் சிலரை தடுத்து நிறுத்தி முக கவசம் அணியாமல் பள்ளிக்கு வரக்கூடாது. மேலும் வெளியிலும் செல்லக்கூடாது என்று அறிவுரை வழங்கினர். பின்னர் அவர்களுக்கு முக கவசம் வழங்கினார். இதே போன்று சேலம் அஸ்தம்பட்டி உழவர்சந்தைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினார்.
Related Tags :
Next Story