திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 10 March 2021 8:04 PM IST (Updated: 10 March 2021 8:04 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கோவில்பட்டி, மார்ச்:
கோவில்பட்டியில் 2020- 2021 ஆம் கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தமிழக ஊரக திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி வேலாயுதபுரம் ஈ.வே.அ.வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் க.தினேஷ்பாலா மற்றும் ப.கணேஷ்ராம் ஆகியோர் வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கு 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 உதவி தொகையை அரசு வழங்குகிறது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி செயலாளர் வேல்முருகேசன் பரிசு வழங்கி பாராட்டினார். தலைமையாசிரியர் துரை மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.

Next Story