முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
கயத்தாறு அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு, மார்ச்:
கயத்தாறு தாலுகாவை சேர்ந்த குமாரகிரி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 85). இவருக்கு ஜக்கம்மாள் என்ற மனைவியும், குருசாமி, பொன்னுச்சாமி, கருப்பசாமி, பாலகிருஷ்ணன் ஆகிய 4 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் மாடசாமியை கவனிக்க ஆள் இல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தனது வீட்டின் முற்றத்தில் இருக்கும் வேப்ப மரத்தில் மாடசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மாடசாமி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story