வால்பாறை பகுதியில் கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி


வால்பாறை பகுதியில் கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 March 2021 10:50 PM IST (Updated: 10 March 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதியில் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வால்பாறை,

மலைப்பிரதேசமான வால்பாறையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில்தான் வெயில் அடிக்க தொடங்கும். ஆனால் தற்போது காலநிலை மாற்றம் காரணாக இந்த மாத முதல் வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமானது. 

இதனால் ஆறுகள், நீரோடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டது. 160 அடி உயரம் கொண்ட சோலையார் அணை நீர்மட்டம் மளமளவென குறைந்து 3 அடியானது. இதன் காரணமாக அணையில் குட்டைபோன்று தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அத்துடன் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நின்றது. 

மேலும் இங்குள்ள முக்கிய ஆறான கூழாங்கல் ஆற்றிலும் தண்ணீர் வறண்டது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த ஆற்றில் குளித்து விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

இந்த நிலையில்  வால்பாறை பகுதியில் மதியம் 2 மணிக்கு திடீரென்று மழை பெய்தது. இந்த மழை மாலை 5 மணி வரை நீடித்தது. 
இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் நிலவி வந்த வெப்பம் தணிந்தது. மழையால் நீரோடைகளில் இன்னும் தண்ணீர் வரவில்லை. அதுபோன்று சோலையார் அணைக்கும் தண்ணீர் வரத்து இல்லை. 

தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வால்பாறையில் 2 நாட்களாக கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

Next Story