கடல் சேற்றில் சிக்கியிருந்த படகு மீட்பு
கோடியக்கரையில் 2 மாதங்களாக கடல் சிக்கி இருந்த படகை 10 மணி நேரம் போராடி மீட்டனர்.
வேதாரண்யம்;
கோடியக்கரையில் 2 மாதங்களாக கடல் சிக்கி இருந்த படகை 10 மணி நேரம் போராடி மீட்டனர்.
மீன்பிடி தொழில்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், வல்லம், விசைப்படகுகளில் மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையிலிருந்து தொண்டீஸ்வரம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகி்ல் மீனவர்கள் கோடியக்கரைக்கு மீன்பிடிக்க வந்தனர்.
முயற்சி
கோடியக்கரை அருகே முனங்காட்டு கடற்கரை பகுதியில் இந்த படகு கரை தட்டி சேற்றில் சிக்கியது. இந்த படகை மீட்க மீனவர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால் படகை மீட்க முடியவில்லை. இதனால் மீனவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பொக்லின் எந்திரம் மூலம் படகை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
மீட்டனர்
படகை பொக்லின் எந்திரம் வைத்துமீட்கும் போது பொக்லின். எந்திரம் சேற்றில் சிக்கியது. பின்னர் பொக்லின் எந்திரத்தை டிராக்டர்கள் மற்றும் 2 பொக்லின. எந்திரத்தை கொண்டு மீட்டனர். இந்நிலையில் நேற்று பொக்லின. எந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சேற்றில் சிக்கி இருந்த விசைப்படகை மீ்ட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார 10 மணி நேர போராட்டத்துக்கு பின் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் உதவியுடன் சேற்றில் சிக்கி இருந்த விசைபடகு மீட்கப்பட்டது. 2 மாதமாக சேற்றில் சிக்கி இருந்த படகு மீட்கப்பட்டதால் படகு உரிமையாளர் மற்றும் சக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்.
Related Tags :
Next Story