2-வது நாளாக கரை ஒதுங்கிய ஏலக்காய் மூட்டைகள்
வேதாரண்யம் கடற்கரையில் 2-வது நாளாக கரை ஒதுங்கிய ஏலக்காய் மூட்ைடகளை போலீசார் கைப்பற்றினர். இந்த ஏலக்காய் மூட்ைடகள் இலங்கைக்கு கடத்த முயன்ற போது கடலில் தவறி விழுந்து கரை ஒதுங்கியதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்;
வேதாரண்யம் கடற்கரையில் 2-வது நாளாக கரை ஒதுங்கிய ஏலக்காய் மூட்ைடகளை போலீசார் கைப்பற்றினர். இந்த ஏலக்காய் மூட்ைடகள் இலங்கைக்கு கடத்த முயன்ற போது கடலில் தவறி விழுந்து கரை ஒதுங்கியதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏலக்காய் மூட்டைகள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, கோடியக்காடு, வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. வேதாரண்யம் கடற்பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா, மஞ்சள் மூட்டைகளை போலீசார் அடிக்கடி பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் மணியன்தீவு கடற்கரைக்கு தெற்கே முனங்காடு கடற்கரை பகுதியில் 2 மூட்டகளில் மொத்தம் 25 கிேலா ஏலக்காய் கரை ஒதுங்கி கிடந்தது. ரூ.2 லட்சம் மதிப்பிலான இந்த ஏலக்காய் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து இந்த ஏலக்காய் மூட்டகள் இலங்கைக்கு கடத்த முயன்ற போது படகில் இருந்து தவறி விழுந்து கரை ஒதுங்கியதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2-வது நாளாக
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக இதே மணியன்தீவு கடற்கரைக்கு தெற்கே முனங்காடு கடற்கரை பகுதியில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 65 கிலோ எடை கொண்ட 3 ஏலக்காய் மூட்டைகள் கரை ஒதுங்கி கிடந்தன. இது குறித்து அந்த பகுதியில் கரையோரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடலோர காவல் குழும அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் தமிழக கடலோர காவல் குழும துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து கரை ஒதுங்கிய 3 ஏலக்காய் மூட்டைகளையும் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த ஏலக்காய் மூட்டைகள் இலங்கைக்கு கடல் வழியாக கடத்தி செல்ல முயன்ற போது கடலில் தவறி விழுந்து கரை ஒதுங்கியதா? என கடலோர காவல் குழும அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story