மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது


மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 March 2021 11:48 PM IST (Updated: 10 March 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குளித்தலை
குளித்தலை வைகநல்லூர் பகுதி கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு தீபக்குமார் குளித்தலை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குளித்தலை காவிரி நகர் பூங்கா அருகே 4 பேர் ஆற்றில் இருந்து மணலை திருடி மூட்டையில் கட்டி மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு அங்கு நின்றுகொண்டு இருந்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலரை பார்த்த அந்த 4 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தீபக்குமார் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மணல் திருட்டில் ஈடுபட்ட தினேஷ் (வயது 23), சந்திரசேகர் (27), யுவராஜ் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜி என்பவரை தேடிவருகின்றனர்.

Next Story