தவிட்டுப்பாளையத்தில் மருத்துவ முகாம்


தவிட்டுப்பாளையத்தில் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 10 March 2021 11:51 PM IST (Updated: 10 March 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

தவிட்டுப்பாளையத்தில் மருத்துவ முகாம் நடந்தது.

நொய்யல்
நஞ்சை புகளூர் ஊராட்சி தவிட்டுப்பாளையத்தில் உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பவித்ரா தலைமையில் கிராம செவிலியர் சாந்திபானு, சுகாதார ஆய்வாளர்கள் மயில்வாகனன், கார்த்திக், வீரமணி, லேப் டெக்னீசியன் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர். பின்னர் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் அங்கு வந்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி போடப்பட்டது.

Next Story