2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை


2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 March 2021 11:54 PM IST (Updated: 10 March 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

மனைவி பிரிந்து சென்றதால் 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலாயுதம்பாளையம்
வாலிபர் 
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள கூலக்கவுண்டனூர் பஜனை மடத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவருடைய மனைவி சித்ரா (25). இந்த தம்பதிக்கு கிருபாஷினி (8), கபீஷ் (6) என 2 குழந்தைகள் உள்ளனர். சரவணன் குடிபோதைக்கு அடிமையாகி, அடிக்கடி குடித்து விட்டு வந்து, சித்ராவிடம் தகராறு செய்து வந்துள்ளார். 
இதனால் சித்ரா தனது 2 குழந்தைகளையும் மாமியாரிடம் விட்டு விட்டு, சரவணனை பிரிந்து தனது தாய் வீடான திருப்பூருக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார்.
தற்கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சரவணன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து சரவணனின் மனைவி சித்ரா வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story