ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 10 March 2021 11:56 PM IST (Updated: 10 March 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்

கமுதி, 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டலமாணிக்கம் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி வேனை பிடித்து சோதனை நடத்தியபோது மதுரைக்கு கடத்த இருந்த தலா 30 கிலோ எடை உள்ள 64 மூடை ரேஷன் அரசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுது்து வேனில் இருந்த மதுரையை சேர்ந்த ராமர் கைது செய்யப்பட்டார், டிரைவர் தப்பி ஓடி விட்டார். மண்டல மாணிக்கம் போலீசார் வாகனம் பறிமுதல் செய்து ராமரை கைது செய்தனர். அரிசி நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story