நெல்லை அருகே லாரி மோதி பள்ளி தலைமை ஆசிரியை பலி


நெல்லை அருகே லாரி மோதி பள்ளி தலைமை ஆசிரியை பலி
x
தினத்தந்தி 11 March 2021 12:35 AM IST (Updated: 11 March 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே லாரி மோதி பள்ளி தலைமை ஆசிரியை பலியானார்.

நெல்லை:
நெல்லை அருகே லாரி மோதி பள்ளி தலைமை ஆசிரியை பலியானார்.

தலைமை ஆசிரியை

நெல்லை பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 53). இவர் நெல்லை அருகே உள்ள தாழையூத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

பேச்சியம்மாளும், அவருடன் பணியாற்றும் சாந்தி என்ற ஆசிரியையும்  மொபட்டில் தாழையூத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
தாழையூத்தில் நான்கு வழிச்சாலையில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த லாரிக்கு வழி விடுவதற்காக திரும்பியபோது எதிர்பாராதவிதமாக மொபட் மீது லாரி மோதியது.

பரிதாப சாவு

இதில் பேச்சியம்மாள், சாந்தி ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே பேச்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story