மகா சிவராத்திரியையொட்டி நெல்லையில் பூக்கள் விலை உயர்வு


மகா சிவராத்திரியையொட்டி  நெல்லையில் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 11 March 2021 12:39 AM IST (Updated: 11 March 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

மகா சிவராத்திரியையொட்டி நெல்லையில் பூக்களின் விலை திடீரென உயர்ந்தது.

நெல்லை:
மகா சிவராத்திரியையொட்டி நெல்லையில் பூக்களின் விலை திடீரென உயர்ந்தது.

மகா சிவராத்திரி விழா

மகா சிவராத்திரி விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய, விடிய சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

இதேபோல் கிராமங்களில் உள்ள சக்தி கோவில்களிலும், சாஸ்தா கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் கொடை விழா நடைபெறுவது வழக்கம். சிவராத்திரியில் அனைத்து குலதெய்வ கோவில்களிலும் வழிபாடு நடைபெறுவதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

பூக்கள் விலை உயர்வு

நெல்லை, காவல்கிணறு, சங்கரன்கோவில், பாவூர்சத்திரம் ஆகிய பூ மார்க்கெட்டுகளில் ரூ.750, ரூ.500-க்கு விற்பனையான மல்லிகைப்பூ மற்றும் பிச்சிப்பூ விலை அதிகரித்துள்ளது.
நெல்லை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1000 வரை விற்கப்பட்டது. பிச்சிப்பூ கிலோ ரூ.1000 வரை விற்பனையானது. ரோஜாப்பூக்கள் ஒரு கிலோ ரூ.150-க்கும், அரளி மற்றும் கதம்ப பூக்கள் கிலோ ரூ.150-க்கும் விற்பனையானது.

நெல்லை மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பூ வியாபாரிகள் பூக்கள் வாங்க குவிந்ததால் பூ மார்க்கெட்டுகளில் அதிக கூட்டம் காணப்பட்டது. மார்க்கெட்டுக்கு குறைந்த அளவு பூக்களே வந்திருந்ததால் அவை அனைத்தும் விரைவில் விற்று தீர்ந்தது.

Next Story