மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வது குறித்த செயல்விளக்க பயிற்சி


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வது குறித்த செயல்விளக்க பயிற்சி
x
தினத்தந்தி 11 March 2021 12:40 AM IST (Updated: 11 March 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு மி்ன்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வது குறித்த செயல்விளக்க பயிற்சி கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி, 
சட்டமன்ற தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவற்றை எவ்வாறு கையாள வேண்டும் மற்றும் வாக்குப்பதிவின் போது மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த தேர்தல் மண்டல அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை தாசில்தார்களுக்கு செயல் விளக்க பயிற்சி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 
இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதவாவது:-  தேர்தல் நாளான்று வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை சரிபார்த்து எடுத்து செல்ல வேண்டும். இ.வி.எம்.எந்திரம் பெறும்போது அவை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு உரியதுதானா? என்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  சானிடைசர் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் ஆகியவற்றின் வரிசை எண் சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

உறுதி செய்ய வேண்டும்

வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் இரவு முக்கியமான படிவங்களில் நிரப்பப்பட வேண்டியவற்றை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நிரப்புவதை உறுதி செய்ய வேண்டும. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முறையான வாக்குப்பதிவு தொடங்கியதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். தேர்தலில் எந்த வித குளறுபடியும் நடக்காமல் இருக்க அனைவரும்  தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியினை சிறப்பாக செய்ய வேண்டும். தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.  இவ்வாறு அவர் பேசினார். இதில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஸ்ரீகாந்த், உளுந்தூர்பேட்டை சரவணன், சங்கராபுரம் ராஜவேல், ரிஷிவந்தியம் ராஜாமணி மற்றும் தேர்தல் மண்டல அலுவலர்கள்  உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story