மனைவியை வெட்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை அம்பை கோர்ட்டு உத்தரவு
மனைவியை வெட்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
அம்பை:
வீரவநல்லூர் போலீஸ் சகரத்திற்கு உட்பட்ட மலையான்குளம் வடக்கு தெருவைச் சே்ாந்தவர் ராமச்சந்திரன் (வயது 60). இவரது மனைவி மூக்கம்மாள். ராமச்சந்திரன் தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார்.
கடந்த 23-11-2013 அன்று வீட்டில் இருந்த மூக்கம்மாளை அரிவாளால் ராமச்சந்திரன் வெட்டினார். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து மூக்கம்மாள் வீரவநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு அம்பை சார்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா, மனைவியை வெட்டி கொலை செய்ய முயன்றதாக ராமச்சந்திரனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோமதி சங்கர் வாதாடினார்.
Related Tags :
Next Story