தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஒருவாரம் முன்னதாக நடத்த முடிவு
சட்டமன்ற தேர்தலையொட்டி தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை ஒருவாரம் முன்னதாக நடத்த கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சிவகங்கை,
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
இந்தாண்டு முத்துமாரியம்மன் கோவில் நிறைவு நாள்அன்று 6-ந்தேதி சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறையிலுள்ளதையொட்டியும், அதேபோல் கொரோனா நோய் தாக்குதல் தடுப்பு குறித்த பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டும் சுற்றுவட்டார ஊர் பொதுமக்கள் முழுஒத்துழைப்புடன் வழக்கம் போல் நடைபெறும். விழாவின் நாட்களைவிட ஒருவாரகாலம் முன்கூட்டியே திருவிழா நடத்த முடிவு செய்து விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி 23-ந்தேதி காப்பு கட்டி திருவிழா தொடங்கி 30-ந்தேதி பொங்கல் விழாவும், 31-ந்தேதி தேரோட்டமும், 1-ந்தேதி பால்குட விழாவும், 2-ந்தேதி தீர்த்தவாரி விழாவும் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story