பாளையங்கோட்டையில் இந்து முன்னணியினர் போராட்டம்


பாளையங்கோட்டையில்  இந்து முன்னணியினர் போராட்டம்
x
தினத்தந்தி 11 March 2021 1:08 AM IST (Updated: 11 March 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் விதிமுறைப்படி நெல்லை மாநகர பகுதியில் உள்ள சில தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன. ஆனால் ஒரு சில சிலைகள் மூடப்படவில்லை.

இதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன்பு இருந்து பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை வரை பேரணி நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி சித்த மருத்துவக் கல்லூரி எதிரே இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்டச் செயலாளர்கள் சிவா, சுடலை, செல்வராஜ், செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், ராஜசெல்வம், நமச்சிவாயம் உள்பட பலர் திரண்டனர். அங்கு அவர்கள் போராட்டம் நடத்தினர். 

தொடர்ந்து அங்கு இருந்து பேரணியாக இந்து முன்னணியினர் புறப்பட்டு சென்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் ஜான் பிரிட்டோ இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முறைப்படி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்து முன்னணியினர் போராட்டத்தை கைவிட்டு விட்டு சென்றனர்.

Next Story