கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம்


கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 11 March 2021 1:09 AM IST (Updated: 11 March 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

திருப்பூர், 
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நேற்று காலை திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் தங்கராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கள் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு ஆலைகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வட்டியில்லா பயிர் கடன் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்று எங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளிக்கும் கட்சிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாதபட்சத்தில் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 6 தொகுதிகளில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தனித்து போட்டியிடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Next Story