மகா சிவராத்திரி திருவிழா
மகா சிவராத்திரி திருவிழா
செக்கானூரணி
மதுரையில் இருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கருமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது முனுசாமி கோவில். இக்கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரியன்று விரதம் இருப்பதால் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். இதேபோல் செக்கானூரணி அருகே உள்ள கொக்குளம் ஆதிசிவன் கோவில், பேக்காமன் கருப்புச்சாமி மற்றும் கருமாத்தூர் முனுசாமி கோவில்களில் சிவராத்திரி விழாவன்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவர். திருவிழாவையொட்டி உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story