தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்


தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 11 March 2021 1:20 AM IST (Updated: 11 March 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனத்தில் தி.மு.க.பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருப்புவனம்,

திருப்புவனம் மேற்கு ஒன்றியம், பேரூர் கழக தி.மு.க. சார்பில் பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருப்புவனத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்திசேங்கைமாறன் தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர் நாகூர் கனி முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட கழக துணைச்செயலாளர் சேங்கைமாறன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 80 வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து நேரடியாக தபால் வாக்குகள் அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய, கிளைக்கழக, வட்ட கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story