உரிய அனுமதியின்றி எடுத்துச்சென்ற பணம் பறிமுதல்


உரிய அனுமதியின்றி எடுத்துச்சென்ற பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 March 2021 1:21 AM IST (Updated: 11 March 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

உரிய அனுமதியின்றி எடுத்துச்சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கராபுரம், 

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி முருகன் தலைமையிலான குழுவினர் சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி சாலையில் சிறுவங்கூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்ததில் அதில் ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 740 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மோட்டார் சைக்கிளில் வந்த சங்கராபுரத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவரிடம் விிசாரணை நடத்தினா். இதில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துவரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரி்கள்  பறிமுதல் செய்து, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேலிடம் ஒப்படைத்தனர். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சையத்காதர், சத்யநாராயணன், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, மண்டல தாசில்தார் மாரியாப்பிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் ராமு தலைமையிலான அதிகாரிகள் கோமுகி அணை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சின்னசேலம் அருகே அம்மாபேட்டையை சேர்ந்த சுகனேஷ்வரன் என்பவர் மோட்டார் சைக்கிளில்  உரிய ஆவணம் இன்றி ரூ.78 ஆயிரத்து 490-யை எடுத்துவந்தார். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேலிடம் ஒப்படைத்தனர்.  அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சையத்காதர், சத்யநாராயணன், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, மண்டல தாசில்தார் மாரியாப்பிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story