விராலிமலையில் கொடி அணிவகுப்பு
விராலிமலையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
விராலிமலை, மார்ச்.11-
விராலிமலையில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். கொடி அணிவகுப்பை தேர்தல் நடத்தும் அலுவலரும், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியருமான தண்டாயுதபாணி, புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு செரினா பேகம், இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். கொடி அணிவகுப்பானது விராலிமலை போலீஸ் நிலையத்தில் தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சோதனைச் சாவடி, கடைவீதி, காமராஜர் நகர் வழியாக சென்று ஈஸ்வரி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது. இதில் விராலிமலை தாசில்தார் சதீஸ் சரவண குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story