வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மாசி மகாசிவராத்திரி தேரோட்டம் இன்று மாலை தொடங்குகிறது.
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மாசி மகாசிவராத்திரி தேரோட்டம் இன்று மாலை தொடங்குகிறது.
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மாசி மகாசிவராத்திரி தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்குகிறது.
வீரக்குமாரசாமி
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த கோவில் குலத்தவர்கள் தமிழகம் மட்டுமல்ல பிற மாநிலத்திலும் உள்ளனர். ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெறும்.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் 3 நாட்களுக்கு நடைபெறும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் இருப்பதால் இந்த ஆண்டு தேரோட்டம் 2 நாட்கள் மட்டும் நடத்த தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் அனுமதி வழங்கியுள்ளார், அதனால் இந்த ஆண்டு தேரோட்டம் 2 நாட்கள் மட்டும் நடைபெறுகிறது.
இன்று தேரோட்டம்
இந்த ஆண்டு தேர் திருவிழாவையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தேர் முகூர்த்தகால் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் கடந்த 5-ந் தேதி காலை தேரில் கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது, அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு பள்ளய பூஜை 4.30 மணிக்கு சுவாமி ரதத்திற்கு எழுந்தருளச்செய்தல், மாலை 5.30 மணிக்கு திருத்தேர் நிலைப்பெயர்தல் மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளது.
நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தேரோட்டம், தேர் நிலை சேர்தல் நடைபெற உள்ளது, அதைத்தொடர்ந்து வருகிற 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தினமும் கோவில் குலத்தவர்கள் மண்டப கட்டளை பூஜைகள் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story