கடையம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கடையம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் திருமலை மகன் கார்த்திக் (வயது 26). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மனைவி வினோதா. இவர்களுக்கு குழந்தை இல்லை.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற வினோதா அங்கிருந்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக் விஷம் குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story