திருப்பூரில் உள்ள கடைகளில் அரசியல் கட்சி சின்னங்களுடன் கூடிய விளம்பர பதாகைகள் விற்பனை
திருப்பூரில் உள்ள கடைகளில் அரசியல் கட்சி சின்னங்களுடன் கூடிய விளம்பர பதாகைகள் விற்பனை
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள கடைகளில் அரசியல் கட்சி சின்னங்களுடன் கூடிய விளம்பர பதாகைகள் விற்பனை அதிகமாக உள்ளது.
வரவேற்பு பதாகைகள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுபோல் திருப்பூரில் உள்ள ஆடை தயாரிப்பாளர்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் உருவப்படம் மற்றும் சின்னங்கள் பொறித்த டி-சர்ட்டுகள், முககவசங்கள், கொடி, தொப்பிகள், சால்வைகள் தயாரிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது திருப்பூரில் உள்ள பெரும்பாலான கடைகளில் அரசியல் கட்சி வரவேற்பு பதாகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
விற்பனை அதிகரிப்பு
இது குறித்து கடை உரிமையாளர்கள் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த காலத்தில் அரசியல் கட்சியினருக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்ய தயார் செய்துள்ளோம். அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்கு வரும் போது, அவர்களை வரவேற்கும் அந்தந்த கட்சி தலைவர்களின் படம் மற்றும் கட்சி சின்னங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் மற்றும் பேட்ஜூகள் போன்றவற்றை தயாரித்து விற்பனைக்காக வைத்துள்ளோம்.
இதன் விற்பனையும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அளவிற்கு ஏற்ப இவற்றின் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் வாக்குப்பதிவிற்கு ஒரு மாதம் இருப்பதால் மேலும் இதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்துள்ளோம். இதுபோல் அரசியல் கட்சி தலைவர்கள் படத்துடன் கூடிய பேனாக்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனையும் பலர் உற்சாகமாக வாங்கி செல்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story