இருதரப்பினர் இடையே சாமி கும்பிடுவதில் பிரச்சினை


இருதரப்பினர் இடையே சாமி கும்பிடுவதில் பிரச்சினை
x
தினத்தந்தி 11 March 2021 1:51 AM IST (Updated: 11 March 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

இருதரப்பினர் இடையே சாமி கும்பிடுவதில் பிரச்சினை

திருமங்கலம்
திருமங்கலத்தில் ஆதிசிவலிங்கம் மற்றும் காட்டு கருப்பணசுவாமி கோவில் ஒரே வளாகத்தில் உள்ளன. இந்த கோவிலில் 2 சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த 5 ஆண்டுகள் முன்புவரை ஒன்றாக வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் ஒரு தரப்பினர் சேர்ந்தவர்கள் பூசாரியாக உள்ளனர். இதனால் மற்றொரு தரப்பினர் தங்களுக்கும் பூசாரி உரிமை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதில் பிரச்சினை ஏற்பட்டதால் இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் கோவிலில் வழிபடுவதற்காக தயாராகி வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் காட்டு கருப்பணசுவாமி கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து இந்து அறநிலையத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள், திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினி ஆகியோர் கோவிலை பூட்டி இந்து நல அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது என தெரிவித்தனர். மேலும் கோயிலில் இருதரப்பை சேர்ந்தவர்களும் வழிபட்டுக் கொள்ளலாம். ஆனால் எந்த உரிமையும் கொண்டாட கூடாது என தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக கோவிலில் பரபரப்பான நிலை உருவானது.

Next Story