உலக சிறுநீரக தின விழிப்புணர்வு கருத்தரங்கம்
உலக சிறுநீரக தின விழிப்புணர்வு கருத்தரங்கம்
மதுரை
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம், மருத்துவ முகாம் நடைபெற்றது.
உலக சிறுநீரக தினம்
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவிச்சந்திரன், தியாகராஜர் பொறியியல் கல்லூரி டீன் வாசுதேவன், தலைமை சிறுநீரக சிகிச்சை நிபுணர் சம்பத்குமார், மில்லினியம் மால் லால்ஜி வோரா மற்றும் சிறுநீரக சிகிச்சை நிபுணர் அன்ட்ரூவ் தீபக் ராஜிவ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறுநீரக பரிசோதனை மற்றும் டயாலிசிஸ் உபகரணங்களை இலவசமாக பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், சிறுநீரகவியல் துறையின் தலைவர் கே. சம்பத்குமார் பேசுகையில், நாள்பட்ட சிறுநீரக நோய், இந்தியாவில் மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உலகளவில் உயிரிழப்பிற்கான ஆறாவது மிகப்பொதுவான காரணமாக அது இருக்கிறது. மேலும் உலக அளவில் ஏறக்குறைய 70 கோடி மக்களை அது பாதிக்கிறது. சிறுநீரக செயலிழப்பு என்பது, சப்தமில்லாமல் கொல்கின்ற நோய். பாதிப்பு கடுமையாக இருக்கின்ற போது அவற்றை சிகிச்சையால் குணப்படுத்த இயலாது. ஆகவே, குறிப்பிட்ட காலஅளவுகளில் சிறுநீரக பரிசோதனையை செய்து கொள்வதும், சிறுநீரக நோய்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த அல்லது தாமதிக்க உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணங்களை கட்டுப்படுத்துவதும், மாற்றியமைத்துக்கொள்வதும் முக்கியமானது.
சிறுநீரக கற்கள்
சிறுநீரக அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், சிறுநீரக கற்களின் பாதிப்பு குறித்து பேசுகையில், பொதுவான வாழ்க்கை முறை நோய்களுள் ஒன்றாக சிறுநீரக கற்கள் உருவெடுத்திருக்கிறது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர், வாழ்நாள் காலத்தில் சிறுநீரக கற்கள் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். அவர்களுள் சுமார் 50 சதவிகிதத்தினருக்கு ஏதாவது ஒரு வடிவத்தில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது என்றார்.
சிறுநீரகவியல் துறை நிபுணர் டாக்டர் ஆண்ட்ரூ தீபக் ராஜிவ் பேசுகையில், பல சிறுநீரக நோய்களுக்கான அறுவை சிகிச்சை சார்ந்த மற்றும் அறுவைசிகிச்சை சாராத சிகிச்சை முறைகளின் வெற்றி விகிதமானது, மாற்று சிறுநீரக சிகிச்சை உள்பட 90 சதவிகிதத்திற்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. சிறுநீரகத்தை தானமாக வழங்குபவர்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு உருவாவதற்கு ஓரளவிற்கு வாய்ப்பு இருக்கிறது என்றாலும், உடலுறுப்பை தானமாக வழங்குவதன் மூலம் ஒரு உயிரை காப்பதில் கிடைக்கின்ற உணர்வுரீதியான திருப்தி நிகரற்றது என்றார்.
Related Tags :
Next Story