சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மற்றும் மானாமதுரை தனி ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 304 பேர் அனுமதி பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். நடைபெற உள்ள சட்டமன்றதேர்தலையொட்டி அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்களில் வங்கி ஏ.டி.எம்.களுக்கு பணம் கொண்டு செல்லும் பணியில் உள்ள 76 பேரை தவிர மற்றவர்கள் தேர்தல் நடத்தை விதிக்கான காலம் முடியும் வரை அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அத்தியாசிய பணியில் ஈடுபட்டுள்ள 76 பேரை தவிர மீதியுள்ள 228 பேர் தங்கள் துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.