கூடுதலாக 50 துப்புரவு பணியாளர்கள் நியமனம்
கொடைக்கானலில் கூடுதலாக 50 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஏப்ரல் முதல் வாரத்தில் குளு குளு சீசன் தொடங்க உள்ளது.
இதனை எதிர்கொள்ளும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு லேசான சாரல் மழை பெய்தது.
கோடை கால சீசனையொட்டி கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
நட்சத்திர ஏரிச்சாலையில் நகராட்சி பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை நகராட்சி ஆணையாளர் நாராயணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது நகராட்சி ஆணையாளர் கூறுகையில், நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் போதிய அளவு குடிநீர் இருப்பு உள்ளது. இதனால் 6 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும். அத்துடன் நகருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நகரை தூய்மையாக வைத்திருப்பதற்காகவும், ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்காகவும் கூடுதலாக 50 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுற்றுலா இடங்களில் 24 மணிநேரமும் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
Related Tags :
Next Story