பண்ருட்டி அருகே பெண் சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது


பண்ருட்டி அருகே பெண் சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 11 March 2021 2:35 AM IST (Updated: 11 March 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே பெண் சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கடலூர், 
பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி மற்றும் போலீசார் கடந்த மாதம் 19-ந்தேதி ஒதியடிக்குப்பம் முருகன் கோவில் பின்புறம் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மனைவி மாணிக்கவள்ளி (வயது 50) என்பவர் 2 பாலித்தீன் பைகளில் சுமார் 110 லிட்டர் சாராயத்தை வைத்து விற்பனை செய்தார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சாராயம் விற்ற பணம் ரூ.360-யையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்தில் 7 சாராய வழக்குகள் உள்ளன.

இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் விதமாக அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவின்பேரில் மாணிக்கவள்ளியை பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுபோலீசார் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Next Story