திருச்சி தென்னூரில் பணம் வைத்து சூதாட்டம்; 17 பேர் கைது
திருச்சி தென்னூரில் பணம் வைத்து சூதாடிய 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
திருச்சி தென்னூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தாசில்தார் தெருவில் ஒரு இடத்தில் கும்பலாக சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தென்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் சீட்டு கட்டுகளை சிதறவிட்டு அக்கும்பல் தப்பி ஓட முயற்சித்தது. அவர்களில் தென்னூர் குத்பிஷா நகரை சேர்ந்த சகாப்தீன் (வயது 44), செய்யது முகமது, மூலக்கொல்லை தெருவை சேர்ந்த ஹபீப் முகமது, ரபீக் முகமது மற்றும் கார்த்திக், பூபதி, மதி உள்ளிட்ட 17 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 சீட்டு கட்டுகள், ரொக்கம் ரூ.78 ஆயிரத்து 110 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story