வையம்பட்டி அருகே முறையான குடிநீர் வழங்கிடக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்


வையம்பட்டி அருகே முறையான குடிநீர் வழங்கிடக்கோரி  கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 March 2021 3:25 AM IST (Updated: 11 March 2021 3:25 AM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே முறையான குடிநீர் வழங்கிடக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி,

வையம்பட்டி அருகே முறையான குடிநீர் வழங்கிடக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பெரிய அணைக்கரைப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் கடந்த சில வருடங்களாகவே கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. கடந்த 2013-ம் ஆண்டில் அந்த பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கட்டப்பட்டு இதுவரை நீர் ஏற்றப்படவில்லை. 

இதனால் குடிநீருக்கு கூட வழியின்றி கடும் சிரமத்திற்கு ஆளாக மக்கள் இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் விதவித இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை வையம்பட்டி- கரூர் சாலையில் டேம் நால்ரோடு என்ற இடத்தில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து பாதிப்பு

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அங்கிருந்த மக்கள் தங்களுக்கு முறையான குடிநீர் இன்றி கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகவே முறையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தேர்தலை புறக்கணிக்க..
இதுமட்டுமின்றி தேர்தலை புறக்கணிப்பதாகவும் கூறி வாசங்கள் அடங்கிய அட்டையும் கையை ஏந்தி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வையம்பட்டி போலீசார் மீண்டும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று கூறி மறியலை கைவிட செய்தனர். 

ஆனாலும் அங்கிருந்த மக்கள் தங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

Next Story