அதிக சத்தத்துடன் திருச்சியை கடந்த சுகாய் போர் விமானம்
அதிக சத்தத்துடன் சுகாய் போர் விமானம் திருச்சியை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்திற்கு அரக்கோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட ராணுவ தளங்களிலிருந்து போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயிற்சிக்காக வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 7.50 மணிக்கு தஞ்சை விமான தளத்தில் இருந்து 3 சுகாய் விமானங்கள் திருச்சி மாநகரை அதிக சத்தத்துடன் கடந்து சென்றன. இதனால், வீட்டின் உள்பகுதி இருந்த பொதுமக்கள் அச்சம் அடைந்து வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தனர். அப்போது சுகாய் விமானம் கடந்ததை உறுதி செய்த பின்பு மீண்டும் இயல்பு நிலையை அடைந்தனர்.
Related Tags :
Next Story