8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு


8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 10 March 2021 10:09 PM GMT (Updated: 10 March 2021 10:09 PM GMT)

8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியன ஈரோடு ரெயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. அதன்பிறகு கணினி சுழற்சி முறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்திலும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்திலும் வைக்கப்பட்டு்ள்ளன. கோபி தொகுதிக்கு உட்பட்ட 349 வாக்குச்சாவடிகளுக்கான 454 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அருந்து கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story