புதிய வாக்காளர்கள் இணையதளம் மூலம் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்

புதிய வாக்காளர்கள் இணையதளம் மூலம் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்
x
தினத்தந்தி 11 March 2021 7:16 AM IST (Updated: 11 March 2021 7:19 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்த வாக்காளர்கள் ்13,14-ந்்தேதி ஆகிய 2 நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,
 
சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- 2021-ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையினை e-EPIC செயலி மூலம் பதிவிறக்கம் செய்ய 13.03.2021 மற்றும் 14.03.2021 ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின்போது புதிய வாக்காளர்கள் படிவம்-6-ல் கொடுக்கப்பட்ட கைபேசி எண்ணைக் கொண்டு வரும் 13.-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் தங்கள் எல்லைக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் தங்களது வாக்காளர் புகைப்பட அட்டையினை பதிவிறக்கம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே புதிய வாக்காளர்கள் மேற்படி தேதிகளில் நடைபெற உள்ள முகாமினை பயன்படுத்தி தங்களது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்ய கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story