பாலக்கோடு சோதனைச்சாவடியில் புளி வியாபாரியிடம் ரூ.7.50 லட்சம் பறிமுதல்


பாலக்கோடு சோதனைச்சாவடியில் புளி வியாபாரியிடம் ரூ.7.50 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 March 2021 12:33 PM IST (Updated: 11 March 2021 12:33 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு சோதனைச்சாவடியில் புளி வியாபாரியிடம் ரூ.7.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காடுசெட்டிப்பட்டி சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில் ராயக்கோட்டையை சேர்ந்த புளி வியாபாரி பாலாஜி (வயது 35) என்பவர் புளி வாங்குவதற்காக உரிய ஆவணம் இல்லாமல் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் எடுத்து கொண்டு வந்தது தெரியவந்தது. 
இந்த பணத்திற்கு எவ்வித ஆவணமும் இன்றி இருந்ததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை கைப்பற்றி பாலக்கோடு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் பாலக்கோடு சார் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Next Story