மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் + "||" + Public Sudden Road Stir

டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.
துடியலூர்,

கோவை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி திருவள்ளுவர் நகர் அருகே பிருந்தாவன் நகர் உள்ளது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு மின் அழுத்தம் குறைவாக உள்ளதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. 

இந்த நிலையில் அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி)  அமைப்பதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்தனர். ஆனால் அந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக்கூடாது என்று ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பணி நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் அதே இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக்கோரி  அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கணுவாய் தடாகம் ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு தடாகம் சப்- இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், உதவி பொறியாளர் சுரேஷ்பாபு ஆகியோர் சென்று விரைவில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த கோவிலை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பொன்னேரி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பர்வதீஸ்வரர் கோவிலை புனரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
அரியலூரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
3. கடலூரில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
முழு ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி கடலூரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
4. பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது; சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சு
பொதுமக்கள் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
5. பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
சென்னையை அடுத்த தாம்பரம், பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்.