குடியாத்தம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்


குடியாத்தம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 March 2021 7:17 PM IST (Updated: 11 March 2021 7:17 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பேரணாம்பட்டு

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய இணைச்செயலாளர் மசிகம் பரிதா என்பவரை கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் வேட்பாளரை மாற்றக்கோரி நேற்று பேரணாம்பட்டு பஸ் நிலையம் அருகில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு கோஷமிட்டனர். நகர துணை செயலாளர் சிவாஜி, மாவட்ட பிரதிநிதிகள் திருமால், தேசமுத்து, இன்பரசன், பொருளாளர் ஆனந்தன், இலக்கிய அணி செயலாளர் அறிவுடை நம்பி, வார்டு செயலாளர் பாரத், வழக்கறிஞர் வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story