கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு
கம்பத்தில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு 2 மணி நேரம் மின்தடை
கம்பம்:
கம்பம் நகரின் மையப்பகுதியான அரசமரம் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இந்த பாலத்தை ஒட்டி பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு வயர்கள், கூட்டுக்குடிநீர் குழாய் உள்ளது.
இந்த பாலம் கட்டுமானத்தின்போது கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்தது. இதையடுத்து குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடைந்த குழாயை அகற்றிவிட்டு புதிய குழாயை பொருத்தினர்.
ஆனால் இந்த குழாயை முறையாக பொருத்தாததால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.
இந்நிலையில் நேற்று மீண்டும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.
மேலும் இந்த தண்ணீர் அருகில் இருந்த மின்கம்பிகள் மற்றும் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மீதும் பீய்ச்சியடித்தது.
இதனால் அந்த பகுதியில் மின்விபத்து உண்டாகும் அபாயம் ஏற்பட்டது,
இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்மாற்றிக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பின்னர் தண்ணீர் பீறிட்டு வருவது நின்றவுடன் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
எனவே கூட்டுக்குடிநீர் குழாயை முறையாக பராமரிப்பு செய்து தண்ணீர் வீணாக வௌியேறுவதை தடுக்க ேவண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story