லாரி மீது கார் மோதி விபத்து
லாரி மீது கார் மோதி விபத்து
கூடலூர்
கூடலூர் நகரில் நேற்று காலை முதல் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில் காலை 11 மணியளவில் ஊட்டியில் இருந்து கூடலூர் பழைய பஸ் நிலையம் வழியாக புதிய பஸ் நிலையத்தை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.
அப்போது சின்ன பள்ளிவாசல் தெரு பகுதியில் இருந்து மெயின் ரோட்டுக்கு ஒரு கார் வந்தது. இந்த சமயத்தில் முன்னால் சென்ற கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் லாரியை நிறுத்தினார். அப்போது பின் பக்கம் வேகமாக வந்த மற்றொரு கார் லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைக்கண்ட போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சேதமடைந்த காரும், விபத்தில் சிக்கிய லாரியும் சாலையோரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 15 நிமிடத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story