தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை


தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 11 March 2021 9:24 PM IST (Updated: 11 March 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கயத்தாறு,

கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் வடக்கு காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் காந்திராஜ் (வயது 20). இவர் கயத்தாறில் உள்ள ஒரு மரக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் காந்திராஜ் நேற்று முன்தினம் தனது தாயாரிடம் செலவுக்கு பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த காந்திராஜ் விஷம் குடித்து விட்டு, தனது தாயாரிடம் சென்று நான் விஷம் குடித்து விட்டேன் என்று கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காந்திராஜை சிகிச்சைக்காக கயத்தாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காந்திராஜ் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி இந்திராநகரை சேர்ந்த நயினா முகமது மகன் முகமது யாசின் (24). இவர் டிஜிட்டல் போர்டு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகமது யாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (50). இவர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இரவில் கடையில் படுத்து தூங்குவார். சம்பவத்தன்று இவர் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story