கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழா குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை நிர்வாகம் அறிவிப்பு
பெருமாநல்லூரில் கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெருமாநல்லூர்
பெருமாநல்லூரில் கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொண்டத்து காளியம்மன் கோவில்
பெருமாநல்லூரில் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொண்டத்து காளியம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக குண்டம் திருவிழாவானது நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு கோவில் குண்டம் திருவிழா வருகிற 19-ந் தேதி ஆயக்கால் நடப்பட்டு தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் இந்த வருடம் குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும், பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள் நடத்த அனுமதியில்லை
மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவதையும், தவிர்க்க வேண்டும். திருவிழா கடைகள், ராட்டின தூரிகள் போடுவதற்கு அனுமதியில்லை. கோவில் வளாகத்தில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்க அனுமதியில்லை எனவும் கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குண்டம் இறங்குதல் நிகழ்வு முக்கியமான ஒன்றாகும், அதற்கு பக்கதர்களுக்கு அனுமதியில்லை என்பதும், திருவிழாக்கடைகள் அமைக்க அனுமதியில்லை என்பதும் பக்தர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் தடுப்பு விதிகளுக்குட்பட்டு குறைந்த அளவிலான பக்தர்களையாவது குண்டம் இறங்க அனுமதிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.
Related Tags :
Next Story