வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டரில் எல்லைக்கோடு

வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டரில் எல்லைக்கோடு
x
தினத்தந்தி 11 March 2021 10:23 PM IST (Updated: 11 March 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்க உள்ளதையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்யும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து 100மீட்டர் தூரத்தில் எல்லைக்கோடு வரையப்பட்டது.

உடுமலை
வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்க உள்ளதையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்யும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து 100மீட்டர் தூரத்தில் எல்லைக்கோடு வரையப்பட்டது.
வேட்பு மனு தாக்கல்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதையடுத்து  வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்கு வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வருவதற்கு 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
உடுமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ.அலுவலகம் உடுமலை எலையமுத்தூர் சாலையிலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் அலுவலகம் கச்சேரி வீதியிலும் உள்ளன.
எல்லைக்கோடுகள்
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுதாக்கல் தொடங்குவதையொட்டி இந்த ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் இருந்து 100மீட்டர் தூரத்தில் சாலையின் 2 புறமும் எல்லைக்கோடுகள் நேற்று வரையப்பட்டன. 
இதேபோன்று தாலுகா அலுவலகத்தில் இருந்து 100மீட்டர் தூரத்தில் கச்சேரி வீதி மற்றும் தளி சாலை ஆகிய இடங்களில் எல்லைக்கோடுகள் வரையப்பட்டது. 
இந்த பணிகளை வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர். 

Next Story