100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
கோவை மாநகர போலீஸ் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை போலீஸ் கமிஷனர் சுமித்சரண் தொடங்கி வைத்தார்.
கோவை,
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்க வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் பல இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் வெள்ளை நிறத்திலான பெரிய பலகை வைக்கப்பட்டிருந்தது.
அதில் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில் போலீசார், அலுவலக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் சேர்வதை தவிர்க்கும் விதமாக கோவை மாநகரில் உள்ள சாய்பாபா காலனி, ரேஸ்கோர்ஸ், காட்டூர், பீளமேடு உள்பட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இதுபோன்று பலகை வைக்கப்பட்டு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அதுபோன்று கோவையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சரவணன், பாஸ்கரன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story