திருச்செந்தூர் அருகே வாகன சோதனையில் ரூ.88 ஆயிரம் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே வாகன சோதனையில் ரூ.88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் பைபாஸ் ரோட்டில் நேற்று மாலையில் வேளாண்மை துறை உதவி பொறியாளர் ரேவதி தலைமையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். அதில் உடன்குடி சர்ச் தெருவை சேர்ந்த வியாபாரி அபிஷேக் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.88 ஆயிரத்து 20 கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து தாசில்தார் முருகேசனிடம் ஒப்படைத்தனர். அப்போது மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், தேர்தல் துணை தாசில்தார் சுந்தர ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story